இயேசுவின் திரு இருதயத்தில் இறைவனின் மாபெரும் இரக்கத்தையும், பாதுகாப்பையும் தேடுகிறீர்களா?
உங்களுக்காகவும் உங்களது குடும்பத்திற்காகவும் செபிக்க வேண்டுமா?
'நமது ஞான மேய்ப்பருக்கு நம்மாலான உதவி செய்வது' என்ற திருச்சபைக் கட்டளையை செயல்படுத்த, குருக்களுக்கு உதவ உங்களுக்கு விருப்பமா?
திரு இருதய குருத்துவக் கல்லூரி உங்களுடைய அன்றாட தேவைகளுக்காகச் செபிக்கவும், உங்களோடு இணைந்து பயணிக்கவும் காத்திருக்கிறது.
குருமாணவர்களின் படிப்பை நிறைவு செய்ய , அவர்களுக்கு உதவ நீங்கள் விரும்புகிறீர்களா?
மிக எளிமையாக வாரம் ரூபாய் 10ஐ மற்றும் பங்களிக்க முன்வருவது குருமாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் . நீங்கள் இல்லையெனில் யார் எங்களை ஆதரிப்பது? !!
உங்களுடைய விருப்பத்திற்கேற்ப கீழுள்ள ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்க
எமது திரு இருதய குருத்துவக் கல்லூரி மேற்கொள்ளும் வேறு பல நலத்திட்டங்களுக்கு மனமுவந்து உதவ கீழே தேர்வு செய்யவும்
திரு இருதய குருத்துவக் கல்லூரி கத்தோலிக்க குருக்களை உருவாக்குகிற ஓர் ஆன்மீகப் பாசறை. சென்னை-மயிலை மறைமாவட்டத்திற்குச் சொந்தமான இக்குருத்துவப் பயிற்சி இல்லம் காலம் சென்ற முன்னாள் பேராயர் மேதகு லூயிஸ் மத்தியாஸ் SDB அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையாலும், அயரா உழைப்பாலும் 1936 செப்டம்பர் 8 ம் நாள் நிறுவப்பட்டது
இக்கல்லூரி கடந்த 82 வருடங்களில் 1500க்கும் மேற்பட்ட குருக்களை உருவாக்கி தாய்த் திருச்சபைக்கு அர்பணித்திருக்கிறது. இவர்களிலிருந்து 20 பேர் ஆயர்களாக அருள் பொழிவு பெற்றிருப்பது இந்த இறை பாசறைக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.
திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கத்தோலிக்கரும் குருத்துவப் பணியில் இணைகிறோம் என்பது வெள்ளிடை மலை. இருப்பினும், ஒவ்வொரு கத்தோலிக்கக் குடும்பத்திலும் , 'எமது குடும்பத்திலிருந்து ஒரு குருவாவது உருவாக வேண்டுமே' என்ற ஏக்கம் மேலோங்கியிருப்பது கண்கூடு. இவ்வேக்கம் உணர்ந்து, குருத்துவக் கல்லூரி, உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பை வழங்க முன்வருகிறது. எமது குருத்துவப் பாசறையில் பயிற்சி பெரும் மாணாக்கரில் ஒருவரை, நீங்கள் உங்களது 'ஞான மகனாக'த் தேர்ந்தெடுத்து அவருடைய குருத்துவப் பயிற்சிக்கு உதவலாம். இது 'எனது குடும்பத்திலிருந்து ஒரு குரு உருவாகவில்லையே' என்ற உங்களது ஏக்கத்தை ஈடு செய்யும்.
மேலும் நமது தாய் திருச்சபைக்குத் தேவையான பணியாளர்களை உருவாக்குவதில் கண்ணும் கருத்துமாய் செயல்படும் எம்மவரோடு இணைந்து, குருத்துவ ஆக்கப்பணியில் ஈடுபட உங்களையும் அன்போடு வரவேற்கிறோம். எமது குருத்துவப் பாசறையின் ஈகையாளர்களாகி உங்களது ஆக்கப் பணியை செவ்வனே செய்யலாம். உங்களது மனமுவந்த ஈகை, குரு மாணவர்களை வளர்த்தெடுக்கும் உருவாக்கப் பயிற்சித் திட்டங்களுக்கும், குருத்துவக் கல்லூரியின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கும், எமது கல்லூரியை சுற்றி வாழும் ஏழை எளியவருக்கு உதவிக்கரம் நீட்டவும் பயன்படும் என்பது தின்னம்.
உங்களது ஈகைப் பங்கேற்பு எமது குருத்துவப் பயிற்சிப் பணியில் நம்பிக்கையின் பேரலைகளை உருவாக்கும் என்பது உண்மை!
திரு இருதய குருத்துவக் கல்லூரியில் எமது உருவாக்கப் பணி ஏழு வருடங்களை உள்ளடக்கியது. இரண்டு வருட மெய்யியல் படிப்பும், ஒரு வருட களப்பணியும், மற்றும் நான்கு வருட இறையியல் படிப்பும் அடங்கும்.
எமது பாசறையில் பயிற்சி பெரும் அனைத்துக் குருமாணவர்களுக்காகவும், பயிற்றுவிக்கும் பேராசிரியர்களுக்காகவும் அன்றாடம் செபியுங்கள். எங்களில் தூய ஆவியார் என்றும் குடிகொண்டிருக்கவும், கண்துஞ்சாமல் எமது இறைபணியில் கடமையாற்ற தேவையான அருளுக்காகவும் செபியுங்கள்!
நீங்கள் விரும்பினால் எம்மாணவர்களில் ஒருவரை உமது ஞான மகனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்!
மேலும், உமது ஞானமகன் உட்பட அனைத்து குருமாணவர்களையும் உங்களது செபவுடனிருப்பின் வழியாக நல்லதொரு குருவாக உருவாக ஊக்குவிக்கலாம்.
திரு இருதய குருத்துவக் கல்லூரி உங்களின் கருத்துக்களுக்காகவும், நலன்களுக்காகவும் செபிக்க புதிய முயற்சி மேற்கொள்கிறது
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஈகையாளர்களின் கருத்துக்களுக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கின்றோம். ஒவ்வொரு திருப்பலியிலும் ஈகையாளர்களுக்காக ஒரு சிறப்பு செபமும் செபிக்கப்படுகின்றது.
குருக்கள், குருமாணவர்கள் மற்றும் பொதுநிலையினர் அடங்கிய எங்களின் செபத்தோழர்கள் தொடர்ந்து உங்கள் சார்பாக தந்தையாகிய கடவுளிடம் செபிக்கின்றனர்.
இரக்கமுள்ள தந்தையே எங்கள் ஈகையாளர்கள் வழியாக நாங்கள் அனுபவிக்கும் உமது அளவுகடந்த பராமரிப்புக்கு நன்றி.
எங்கள் குருத்துவ பயிற்சிக்காக அவர்கள் மேற்கொள்ளும் அத்தனை தியாகிகளுக்கு நன்றி.
நீர் எங்களை பெயர் சொல்லி அழைத்தால் அவர்கள் தாராள உள்ளத்தின் மூலமாக எங்களுடைய வாழ்வை மேம்படுத்துகின்றார்கள்.
ஈகையாளர்களின் எல்லா முயற்சிகளையும் ஆசிர்வதிக்க உம்மை வேண்டுகிறோம்.
உமது திருமகன் இயேசு கிறிஸ்துவைப்போல அவர்களது பிள்ளைகளும் ஞானத்திலும் , அறிவிலும் வளர்வார்களாக.
உமது அமைதி அவர்களது குடும்பத்தில் தங்குவதாக.
எங்களது அன்றாட செபத்திலும் , எளிமையான வாழ்விலும் அவர்களை நன்றியோடு நினைத்து பார்க்க கற்றுத் தாரும்.
ஏழை கைம்பெண்ணின் எளிய காணிக்கையை பாராட்டிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திலே செபிக்கின்றோம்.
ஆமென்