கிறித்துவக் குடும்பத்திற்குத் தேவையான மேன்மையான திறன்வாய்ந்த குருக்களை உருவாக்குவதில்
சமுகத்திலிருக்கும் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தார்மீக பொறுப்பும் கடமையும் உண்டு.
உங்களது பதில்?
குருத்துவக் கல்லூரி என்பது, இறை இயேசுவின் விழிமியங்களையும், இறைத்திட்டத்தின் மதிப்பீடுகளையும், குருவாக விரும்பும் இளம் மாணவர்களின் நெஞ்சங்களில் ஆழமாய் விதக்கும் விளைநிலமாகும்.
திரு இருதய குருத்துவக்கல்லூரி 1936ம் ஆண்டு முதல் இம்மாபெரும் இறைபணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்விளை நிலத்தில் விளைந்த 1500 க்கும் மேற்பட்ட குருக்களும், 20 ஆயர் பெருந்தகைகளும், இந்திய நாடெங்கும் விருச்சங்களாய் உயர்தோங்கி நிற்கின்றனர்.
இவர்களில் சென்னை-மயிலை உயர் மறை மாவட்டத்திலும், செங்கல்பட்டு மற்றும் தமிழகத்தின் ஏனைய மறை மாவட்டங்களிலும், எமது குருத்துவ கல்லூரியில் பயின்ற பல குருக்கள் இறைபணிபுரிகின்றனர்.
எங்களுடனான இணைந்த பயணத்தில்:
உங்களின் பிள்ளைகளில் ஒருவரைக் குருவாக்குவதற்கு ஊக்கப்படுத்துங்கள்
குருமாணவர்கள் தங்களின் அழைத்தலிலும், அர்ப்பணத்திலும் நிலைத்து நிற்க அவர்களுக்காக செபம் செய்யுங்கள்.
உங்களின் பொருளாதார உதவியைத் தாருங்கள்.
உங்களின் உதவி எங்களை வந்தடைய:
நீங்கள் ரூ.60,000, ரூ.75,000 அல்லது ரூ.1,00,000 என நிரந்தர வைப்பு நிதி ஒன்றை உங்கள் பெயரிலோ அல்லது நீங்கள் விரும்பும் நபரின் பெயரிலோ ஏற்படுத்துவதன் மூலம் உங்களின் பங்களிப்பை அளிக்கலாம்.
மாதந்தோறும் ரூ. 1000 அல்லது ஆண்டுக்கு ரூ. 10,000 வீதம் ஏழு ஆண்டுகளுக்கு அளிப்பதன் வழியாகவும் ஒரு குரு மாணவர் தனது குருத்துவ அருட் பொழிவை பெறும் அந்த சிறப்பான நேரம் வரை அவர்களின் பயிற்சியில் நீங்கள் உடன் பயணிக்கலாம்.
மாதந்தோறும் ரூ. 250 அதற்கு மேலும் கூட அல்லது ஆண்டுக்கு ரூ. 1000 வீதமும்கூட தங்களால் இயன்றதை அளிப்பது கடலில் கலக்கும் சிறு துளிபோல எங்களின் நிரந்தர வைப்புத் தொகையில் உங்களின் பங்களிப்புச் சேர்க்கப்படும்
நீங்கள் உங்கள் நண்பர்களையும், பிரியமானவர்களையும் கூட இந்த குருமாணவர்களுக்கான உபகாரிகள் திட்டத்தில் சேர்ந்திட ஊக்குவிக்கலாம்.
எங்களின் அர்ப்பணிப்பு:
உங்களின் பொருளாத பங்களிப்பு, குரு மாணவர்களின் பயிற்சி, குருமட பராமரிப்பு மற்றும் எங்களின் இல்லத்தின் அருகாமையிலுள்ள ஏழை மக்களுக்கான உதவி போன்ற நல்ல பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
எனவே உங்களின் உதவி எவ்வளவு சிறியதானாலும், எம் குருமாணவர்களின் உள்ளத்தில் நம்பிக்கைக் கீற்றை உருவாக்கும் மந்திரச் சக்தி கொண்டதாகும்.
உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்து எங்களுக்குப் பங்களிக்க தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
உங்களின் பங்களிப்பு
தங்கள் பங்களிப்பைத் தருவதன் வழியாக குருத்துவப் பயிற்சிக்கு ஏற்ற சூழ்நிலை ஏற்படுத்தும் பணியில் பங்கெடுக்கிறீர்கள்.
உங்களின் பங்களிப்பு எவ்வளவு சிறியதானாலும், அது எங்களுக்கு சிறப்பான மதிப்புள்ளதும், மிகப் பெரிய வித்தியாசத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாகும்.
உங்கள் விருப்பத்தை தேர்வு செய்து எங்களுக்கு பங்களிக்க தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
Note:
இந்தப் பங்களிப்பில் வரிச்சலுகை ஏதும் இல்லை
பின்வரும் பட்டண்களில் ஒன்றைத் தேர்வு செய்க. அதில் வரும் ஸ்கிரீனில், Option-ஐ அழுத்தி, உங்களின் பங்களிப்பை எழுதி, UPDATE என்ற பட்டணை அழுத்தவும்
உங்களின் பங்களிப்போடு பங்களிப்புப் படிவத்தின் இரண்டாம் பக்கத்தில் உங்களின் கருத்துக்களைக் குறிப்பிடவும்
நீங்கள் NRI-யாக இருந்தால், இந்த பட்டணை அழுத்தவும்
If you are from countries other than India and contributing to the Seminary, please click here
நீங்கள் இந்தியராகவும், இந்தியாவில் வாழ்பவராக இருந்தால், இங்கே உங்கள் பங்களிப்பை அளிக்கலாம்